திரு. முத்துகுமாரு சுந்தரமூர்த்தி

முத்துகுமாரு சுந்தரமூர்த்தி

தோற்றம்: 14 பெப்ரவரி 1942 - மறைவு: 04 ஆகஸ்ட் 2024

யாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துகுமாரு சுந்தரமூர்த்தி அவர்கள் 04-08-1942 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துகுமாரு-நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்-பத்மாவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சகுந்தலா அவர்களின் அன்புக்கணவரும்,

சித்திரகலா [சுவிஸ்], கீதாஞ்சலி [சுவிஸ்], பிரஷாந்தினி [சுவிஸ்], சுபாஷினி [சுவிஸ்], ஷர்மிளா,கஜேந்திரவரன் ஆகியோரின் அன்பு தந்தையும்,

சிவானந்தன் [சுவிஸ்], ரவீந்திரகுமார் [சுவிஸ்], சிவனேஸ்வரன் [சுவிஸ்], அன்ரன் ஜெரோம் [சுவிஸ்], குகபரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கீர்த்தனன், நிலானி, ஹரிசாம்பவி, ஹரிஷான், பிரஷான்,ஷரன், ஹர்ஷனி, ஹரிசங்கர் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பரமேஸ்வரி, ஜெயரட்ணம்,  சுந்தரலிங்கம், புவனேஸ்வரி மற்றும் யோகலிங்கம், மகேஸ்வரி, சுப்ரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சீவரட்ணம், நவரட்ணம், புவனேஸ்வரி,கமலாதேவி மற்றும்  ராஜதுரை, யோகேஸ்வரி, துரைராஜசேகரம், இந்திராதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-08-2024 திங்கட்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் வேம்பன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

முகவரி:-
 
சிவகுல வீதி [முத்துகுமாரு ஒழுங்கை],

உரும்பிராய் மேற்கு, உரும்பிராய்.

 
தகவல்:- குடும்பத்தினர்
 
 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
 
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/08/2024 04:00)