Mr Muthukumaru Wijeyaragunathan
(Retired Accountant)
Deceased: 03 January 2020
இணுவிலைப் பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட மு. விஜயரகுநாதன் கடந்த 03.01.2020 வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு - செல்லம்மா தம்பதிகளின் ஏக புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான ஆசிரியத் தம்பதிகளான ஆறுமுகம் - சரஸ்வதி ஆகியோரின் அன்பு மருமகனும்,
குககுமாரியின் (ஓய்வுபெற்ற அதிபர் - நல்லூர் தெற்கு ஸ்ரீ விக்கினேஸ்வரா வித்தியாலயம்) அன்புக்கணவரும்,
திருமதி லாவண்யா மயூரேசன் (ஆசிரியை கொழும்பு றோயல்கல்லூரி), ஸ்ரீவிசாகன் (விரிவுரையாளர் - பல்கலைக்கழக கல்லூரி - மாத்தறை), ஸ்ரீவித்தகன் (உயிரியல் மருத்துவப் பெறியியலாளர் - யாழ் போதனா வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வைத்தியநிபுணர் A.P மயூரேசன் (தள வைத்தியசாலை - புத்தளம்), திருமதி.ஸ்ரீ.சுபரம்யா (விரிவுரையாளர் - வவுனியா வளாகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆ. ஸ்ரீஸ்கந்தமூர்த்தி, ஆ. குகமூர்த்தி, இ.கோணேஸ்வரி, ஆறுதிருமுகன், ந.விக்கினேஸ்வரி, ஆ.கேதீஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற ஸ்ரீ ஞானலக்சுமி, கு. சகிகலா, காலஞ்சென்ற ஆ. இராமச்சந்திரன், இ.நரேந்திரா, சி.ஆனந்தரட்ணம் ஆகியோரின் சகலனும்,
கோகுலன், கேதுஷா, வினோஜி, உஷேனி, விதுஷன், தர்மிதா ஆகியோரின் பெரியப்பாவும்,
மனைவி வழியே Dr. சொ. கமலகுமார், தாயினி, விசாரதன், வேதப்பிரியன் ஆகியோரின் மாமாவும்,
லிவிராம், கல்கி, தனிஷ்சவின் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 246/4A. கோயில் வீதி, நல்லூர் இல்லத்தில் நாளை (05.01.2020) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக முற்பகல் 11.00 மணிக்கு இணுவில் பூவோடை மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
246/4A. கோயில் வீதி, நல்லூர்,
யாழ்ப்பாணம்.
தகவல் : ஆ.ஸ்ரீஸ்கந்தமூர்த்தி
(மைத்துனர்)
+94 77 833 2001, +94 21 222 7225
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/01/2020 04:14)
