திரு. முத்துலிங்கம் கிருபாதீஸ்வரன்

(Senior Technical Officer - RDA)

முத்துலிங்கம் கிருபாதீஸ்வரன்

தோற்றம்: 18 மார்ச் 1967 - மறைவு: 23 ஜூலை 2026

யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. முத்துலிங்கம் கிருபாதீஸ்வரன் அவர்கள் 23-07-2026 வியாழக்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம் - நவமணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐங்கரமூர்த்தி - ஜெயராணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தர்ஷினி (ஆசிரியை - கொழு. அல்-அமின் வித்தியாலயம்) அவர்களின் கணவரும்,

கொழு. பரிதோமாவின் கல்லூரியின் மாணவர்களான கோபிகேசவன், விகாசன்,விதுஷன் ஆகிய மூவரின் பாசமிகு தந்தையும்,

வினோதீஸ்வரன் (கனடா), யுவிந்தீஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்பு சகோதரனும்,

ஆனந்தி (கனடா), சிவசக்தி (கனடா), சாந்தினி (ஆசிரியை - கொழு. புனித அந்தோனியர் மகாவித்தியாலயம்), தருமானந்தன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 958 8406
+94 77 931 7479

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/07/2026 00:00)