திருமதி. முத்துராசா அம்பிகைப்பிள்ளை
தோற்றம்: 14 நவம்பர் 1944 - மறைவு: 18 ஆகஸ்ட் 2025
திருகோணமலை கோபாலபுரம் நிலாவெளியைப் பிறப்பிடமாகவும், கனடா - Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முத்துராசா அம்பிகைப்பிள்ளை 18-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் - மாணிக்கம் தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்துராசா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெகநாதன் (பிரித்தானியா), சிவசாந்தினி (கனடா), சிவரஞ்சினி (டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மல்லிகா (பிரித்தானியா), காலஞ்சென்ற குகதாசன் (கனடா), சச்சிதானந்தன் (டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கனகம்மா, இரத்தினம், கிருஸ்ணபிள்ளை, கோணலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராஜா, இலட்சுமிப்பிள்ளை- கெஜரெட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டினோசன்- கரிஷ்மா, கிந்தூரன் (பிரித்தானியா), நிருஷி (கனடா), அபித்யா (டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அரன் (பிரித்தானியா) அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 7:00 மணி வரையும், 25-08-2025 திங்கட்கிழமை முற்பகல் 11:00 - 12:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
