Mr. Muthurajah Pushprajalingham

(நீர்ப்பாசன வெளிக்களக உத்தியோகத்தர் - ஒட்டிசுட்டான்)

Muthurajah Pushprajalingham

Date of Birth: 02 January 1948 - Deceased: 19 April 2026

யாழ். ஏழாலை மேற்கை பிறப்பிடமாகவும், இல- 780, புளுமென்டல் வீதி, கொழும்பு-15 யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. முத்துராஜா புஷ்பராஜலிங்கம் அவர்கள் 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துராஜா - பாக்கியம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், திருநெல்வேலி கிழக்கை சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்துரை - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஷாரகா (கனடா), மதிகரன் (மலேசியா), கௌசியா, கம்ஷா (கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஐங்கரசுதன் (கனடா), டியானா (மலேசியா), குமரன், தவதீஸ் (கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தேனுஜா, ஆதி (கனடா), டர்விஷ், டர்வின் (மலேசியா), ஹாஷினி, திவியன், ஸாத்விகன், விஷாலி (கொழும்பு) ஆகியோரின் தாத்தாவும்,

காலஞ்சென்ற சக்திவேல் (கனடா), கனகலிங்கம் (ஜேர்மனி), புவிராஜசிங்கம் (கனடா), காலஞ்சென்ற திருச்செல்வம், சிவஞானசிங்கம் (இணுவில்) ஆகியோரின் அன்புச்சகோதரரும்,

காலஞ்சென்ற சிவனேசன், இலட்சுமி காந்தன் (கிராம உத்தியோகத்தர்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 21-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3 மணி வரை அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாதம்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/04/2026 00:00)