திருமதி முத்துராஜா தங்கேஸ்வரி

முத்துராஜா தங்கேஸ்வரி

தோற்றம்: 04 பெப்ரவரி 1936 - மறைவு: 01 மே 2024

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, புன்னாலைக்கட்டுவன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முத்துராஜா தங்கேஸ்வரி அவர்கள் 01-05-2024 புதன்கிழமை அன்று புன்னாலைக்கட்டுவனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

கலாமாலினி (கொழும்பு), விஜயசேகரம் (புன்னாலைக்கட்டுவன்), காலஞ்சென்ற வத்சலாதேவி, உதயசேகரன் (Contractor - வவுனியா), சுதர்னகலா (கனடா), விஜயகலா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் முற்பகல் 10.00 மணி வரை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புன்னாலைக்கட்டுவன் விலங்கன் இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:-

பலாலி வீதி, புன்னாலைக்கட்டுவன் தெற்கு,

புன்னாலைக்கட்டுவன்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/05/2024 04:00)