Mrs. Muthusamy Bavanampal (Bavani)
Date of Birth: 16 April 1952 - Deceased: 03 December 2025
ஹட்டன் - டிக்கோயா வனராஜாவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முத்துசாமி பவனாம்பாள் அவர்கள் 03-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துசாமி - மூக்கம்மாள் தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற ஜெகதீசன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுவீதா, உதேஷ்காந்த் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
காலஞ்சென்ற காமாட்சி, துரைராஜ், விஜயலட்சுமி (இந்தியா), பங்கஜம் (இந்தியா), காலஞ்சென்ற சோமசுந்தரம் (இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பூர்த்திகாவின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-12-2025 சனிக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
