Miss. Muthusamy Puvaneswari

(குடும்ப நல உத்தியோகத்தர் (PFWO) - உணுகல, எட்டம்பிட்டிய)

Muthusamy Puvaneswari

Date of Birth: 20 September 1952 - Deceased: 23 July 2025

நுவரெலியா - ஹாலிஎல ரொக்கத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. முத்துசாமி புவனேஸ்வரி அவர்கள் 23-07-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துசாமி கவுண்டர் - நாச்சம்மாள் தம்பதியினரின் செல்வப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான ஜானகி, ஞானமுத்து கவுண்டர் மற்றும் நடராஜா, பரமசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ராகவன் கவுண்டர், முத்துலெட்சுமி, புஸ்பராணி, ராஜலக்ஷ்மி ஆகியோரின் மைத்துனியும்,

குமுதா, சசிகுமார், மோகனகுமரன் ஆகியோரின் சித்தியும்,

ஜனலக், ரிலக்ஷனா, தனுஷியன், ததுர்ஷன், வவிஸ்னயா, சஷ்வின் ஆகியோரின் அத்தையும்,

தினேஷ், குமுதினி ஆகியோரின் பெரியம்மாவும்,

ராகுல், காவிந்யா, துவிக்ஷா, நிக்ஷரா, ஹிமாஷரா, வேதாஸ்ரீ, தேஜஸ், விவர்ணா ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-07-2025 சனிக்கிழமை முதல் உடுதொம்பவத்த, பண்டாரவளை வீதி, ஹாலி-எலயில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் உடலம் பதுளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/07/2025 04:00)