திரு. முத்துசாமி சண்முகம்
தோற்றம்: 31 ஆகஸ்ட் 1939 - மறைவு: 29 மே 2026
நுவரெலியாவைப் பிறப்பிடமாகவும், உடப்புசலாவை. கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.சண்முகம் அவர்கள் 29-05-2026 வெள்ளிக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துசாமி - வெள்ளையம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,
கமலம் அவர்களின் அன்புக் கணவரும்,
இந்திரேசன், குணேஸ்குமார் (General Manager - Colonial Engineering (Pvt) Ltd, சங்கீதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனேந்திரன், சந்திராவதி, திஷாந்தினி ஆகியோரின் மாமனாரும்,
கோகுலச்செல்வன், லோகிதபிரணவி, திவ்யஷாகர் ஆகியோரின் அன்பு பாட்டனாரும்,
அபிஷேக், அரிஷேக், அஜிலாஷ் ,சுதர்ஷி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-05-2026 சனிக்கிழமை முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் (மின் மயானம்) திருவுடல் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
இல- 194, 3/4, Duro Court, பிக்கரிங்ஸ் ரோட்,
கொட்டாஞ்சேனை, கொழும்பு -13.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
