திரு. முத்துசாமிபிள்ளை சந்திரசேகரன்

முத்துசாமிபிள்ளை சந்திரசேகரன்

தோற்றம்: 06 மார்ச் 1953 - மறைவு: 06 ஜூலை 2025

இந்தியா - திருச்சி மாவட்டம் தத்தமங்களம் கிராமத்தை பூர்வீகமாகவும், பதுளை - சார்ணியாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துசாமிபிள்ளை சந்திரசேகரன் அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துசாமிபிள்ளை -பாப்பாத்தி தம்பதியினரின் மகனும்,

காலஞ்சென்ற அருணாச்சலம்பிள்ளை - தனலட்சுமி தம்பதியினரின் மருமகனும்,

மல்லிகா அவர்களின் அன்புக் கணவரும்,

புவனேஸ்வரன், மகதனி (ராதிகா), மகேந்ரவதனி (கீர்த்திகா), சர்மிளா ஆகியோரின் அன்பு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரம்பிள்ளை, கணேஷன் மற்றும் ராஜம்பாள், இந்திராணி, நந்தகுமார் (இந்தியா), ரேவதி (வசந்தி), ஜெயா, ஜெயராம் ஆகியோரின் சகோதரரும்,

பெரியசாமிபிள்ளை, அன்னலட்சுமி, காலஞ்சென்ற சோமசுந்தரம் பிள்ளை, திலகவதி, ராமசாமி, பத்மாவதி ஆகியோரின் சம்மந்தியும்,

விக்னேஸ்வரன் (கொழும்பு), வினோத்குமார் (நிஷான் பாம் சொப் - மெரயா), நிஷாந்தன் (கொழும்பு), நிரோசினி ஆகியோரின் மாமனாரும்,

தனுஷ்கர், அனன்யா ஆகியோரின் பாட்டனாரும்,

ருஸ்திகா, அனுஷ்கர், பிரனித், பிரனீஷா, அம்ரிதா, தட்சாயினி, தன்வஶ்ரீ, தோஷித் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-07-2025 திங்கட்கிழமை மாலை 4.00 மணி முதல் ஊவா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-07-2025 புதன்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் திருவுடல் பதுளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/07/2025 04:00)