Mr. Muthusamyppillai Thangarajah

(புஸ்பா ஜீவலர்ஸ் - கட்டுநாயக்கா)

Muthusamyppillai Thangarajah

Date of Birth: 22 September 1947 - Deceased: 29 May 2025

இந்தியா - திருச்சி மாவட்டம் வடக்கு நந்தமங்களம் கிராமத்தினைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துசாமிப்பிள்ளை தங்கராஜா அவர்கள் 29-05-2025 வியாழக்கிழமை அன்று அதிகாலை 1:00 மணியளவில் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துசாமிப்பிள்ளை - உண்ணாமலை தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற அருணாசலம்பிள்ளை - தனலட்சுமி தம்பதியினரின் மருமகனும்,

ஜெகதாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

யோகேஸ்வரி (கொழும்பு), தர்ஷினி (கொழும்பு), செந்தூரன் (ATB Financial - கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஏகாம்பரம் (புஸ்பா ஜீவலர்ஸ் - நீர்கொழும்பு), வளர்மதி (நீர்கொழும்பு), கஸ்தூரி (நீர்கொழும்பு), மகேஸ்வரி (கொழும்பு), செல்வராஜா (கொழும்பு) ஆகியோரின் சகோதரரும்,

இராமநாதன் (நீர்கொழும்பு), காலஞ்சென்ற சத்தியமூர்த்தி (நீர்கொழும்பு), உமாபதி (கொழும்பு) ஆகியோரின் மைத்துனரும்,

சரஸ்வதி, பவானி ஆகியோரின் கொழுந்தனாரும்,

ரவி நடேசன் (Innova Metal, கொழும்பு-12), நவக்குமரன் (Daya Electrical, கொழும்பு - 11, Lumizo Pvt (Ltd), கொழும்பு - 04), சத்யா (ATB Financial - கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நீர்கொழும்பைச் சேர்ந்த கணேசலிங்கம், மகாலிங்கம், நகுலேஸ்வரன், இந்திராணி, உமாதேவி (கொழும்பு) ஆகியோரின் மைத்துனரும், நடராஜா (நீர்கொழும்பு), திருச்செல்வம் (கொழும்பு) ஆகியோரின் சகலையும்,

காலஞ்சென்ற தேவராஜ் - சரோஜா (கொழும்பு-15), காலஞ்சென்றவர்களான நடேசபிள்ளை - சரஸ்வதி (கொழும்பு), காலஞ்சென்ற கந்தசாமி - ஜெயந்தி (கொழும்பு) ஆகியோரின் சம்பந்தியும்,

செந்தில், புஷ்பா, கோபிநாத் ஆகியோரின்சித்தப்பாவும்,

துர்கா, மயூரன், சுவேத்தா ஆகியோரின் பெரியப்பாவும்,

பிரகதி, ஷஷ்டிக் ஆகியோரின் பாட்டனாரும்,

தனுஷன், லிதுர்ஷன், ஜெய்பிரதீஷ் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-05-2025 சனிக்கிழமை முற்பகல் 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட்டு, 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/05/2025 04:00)