திரு. முத்துத்தம்பி ஜெயரட்ணம் (குழந்தை)

முத்துத்தம்பி ஜெயரட்ணம் (குழந்தை)

தோற்றம்: 29 நவம்பர் 1945 - மறைவு: 03 மே 2026

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துத்தம்பி ஜெயரட்ணம் அவர்கள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முத்துத்தம்பி - அன்னப்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,

காலஞ்சென்ற சிவனேஸ்வரி அவர்களின் (பேபி) அன்புக் கணவரும்,

சிவஜெயந்தன், ஜெயந்தினி, சர்மிளா, கார்த்திகா, சிவப்பிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராசினி, கிருஸ்ணவேணன், சுதாகரன், வருணன், ரிஷிகரன் ஆகியோரின் அன்பு மாமனும்,

காவியன், தேனுகா, யஷ்ணவி, கீரன், லதுசன், ஹரினா, பிரணவி, பிரீத்திகா, பிரஷ்கா, அஷ்வின், அக்ஷ்தா, ஹனுக்க்ஷா, யஷ்மிகா, சகீர்த்யா ஆகியோரின் பேரனும்,

அமரர் செல்வரட்ணம், அமரர் நாகம்மா, இராசரத்தினம், அமரர் சரஸ்வதி, அமரர் புண்ணியமூர்த்தி, நவட்ணம், புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் உரும்பிராய் தெற்கு, ஒஸ்கா வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வேம்பன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 985 4699

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/05/2026 00:00)