Mr. Muthuthamby Opilamany

Muthuthamby Opilamany

Deceased: 21 January 2026

யாழ். இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், உசன் மிருசுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. முத்துத்தம்பி ஒப்பிலாமணி அவர்கள் 21-01-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

இந்திராணி, குருநாதபிள்ளை, செங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

விஜயலட்சுமி (கனடா), விஜயகுமார் (சுவிஸ்), விஜயராணி (கனடா), விஜயரத்தினம் (ஓய்வுநிலை ஆசிரியர் - யாழ். நெல்லியடி மத்திய கல்லூரி, யாழ். சாவகச்சரி இந்துக் கல்லூரி), விஜயகுமாரி (கனடா), விஜயதாசன் (ஆசிரியர் - யாழ். கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி), விஜயகுலன் (கனடா), விஜயரூபன் (கனடா), விஜயபூசணி (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராமஜெயம் (கனடா), செல்வராணி (சுவிஸ்), காலஞ்சென்ற இளையதம்பி (NSB வங்கி உத்தியோகத்தர்), ராகினி (ஆசிரியை - யாழ் கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி), புஸ்பராஜா (கனடா), சோதிலட்சுமி (பிரதி விவசாயப் பணிப்பாளர், கிளிநொச்சி), சாந்தினி (கனடா), கலாவதனி (கனடா) ஆகியோரின் மாமனாரும்,

கோபிகா - மதன் (கனடா), பிருந்தன் (கனடா), விதுஷன் - சாய்ரா (சுவிஸ்), காலஞ்சென்ற நிருஷன் (சுவிஸ்), வர்ஷா (கனடா), கெளதமி (ஆசிரியை - கிளி. கிளிநொச்சி மத்திய கல்லூரி), ரகுராம் (நிலத்தோற்ற வடிவமைப்பாளர், வவுனியா பல்கலைக் கழகம்), அபிராம் (விஞ்ஞான பீட மாணவன், யாழ் பல்கலைக் கழகம்), அனுஷன் - மதுவந்தி (அவுஸ்திரேலியா), மதுஷா (கனடா), மதனிகா (மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர், கொழும்பு), மதுரங்கன் (அவசர சிகிச்சை அதிகாரி, கொழும்பு), மிதுஷன் (கனடா), மைத்திரேயி (கனடா), சஜினி, அபிஷன் (கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

றியான், றிஷான், மிலான், அதிகன், அதிதன் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-01-2026 ஞாயிறுக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஈச்சங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

மதிப்புக்குரிய ஒப்பிலாமணி ஐயாவின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் உசன் முருகனைப் பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் இழப்பால் ஆறாத துயர் அடைந்திருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/01/2026 18:25)