திரு. முத்தையா பரராஜசிங்கம்
(முன்னாள் அதிபர் - மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயம்)
தோற்றம்: 19 மே 1937 - மறைவு: 29 மார்ச் 2025
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், சித்தங்கேணி, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையா பரராஜசிங்கம் அவர்கள் 29-03-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கமலேஸ்வரி (பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி, ஓய்வுநிலை ஆசிரியர்) அவர்களின் ஆசைக் கணவரும்,
செகராஜசிங்கம் (இங்கிலாந்து), மனோரஞ்சன் (கனடா), தர்மினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கல்பனா, ஜெயா, சொரூபராஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தினேஷ், துஷாரா, சஜித், லெட்ஷாயிணி, ரிதிக்கா, சிவப்பிரியன், கவின்மொழி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற சிவபாதம் அவர்களின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-04-2025 செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணி முதல் கல்கிசை மகிந்த மலரச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
முகவரி:-
இல. 14 - 4/3, ஹமார்ஸ் அவெனியூ,
வெள்ளவத்தை.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
