Mr. Mutthaiha Sivalingham

(ஓய்வு பெற்ற பொறியியலாளர்)

Mutthaiha Sivalingham

Date of Birth: 02 September 1944 - Deceased: 01 July 2026

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், இல- 1/3, ஹரிச்சந்திரா மாவத்தை, பாமன்கடை,  கொழும்பு-06 யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. முத்தையா சிவலிங்கம் அவர்கள் 01-07-2026 புதன்கிழமை சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா - இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அருமை மகனும். காலஞ்சென்றவர்களான மகாதேவன் - தர்மபுத்திரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தேவகி அவர்களின் அன்புக் கணவரும்,

சோபனாவின் ஆருயிர் தந்தையும்,

பிரசாந்தின் பாசமிகு மாமனாரும்,

அரண் ஷேஸ்வர், யுவன் ருத்விக் ஆகியோரின் அன்புப் பேரனும்,

தெய்வநாயகி, நவரட்ணராசா, கமலாதேவி, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற சோதிலிங்கம், பாலசுப்ரமணியம், பிரேமசந்திரன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10.30 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 11 236 6212
+94 77 877 8617

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/07/2026 00:00)