Mrs. Mylvaganam Rathinambal

Mylvaganam Rathinambal

Date of Birth: 11 December 1935 - Deceased: 26 August 2025

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மயில்வாகனம் இரத்தினாம்பாள் அவர்கள் 26-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் - பூரணம் தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,

தேவகுமாரன் (தேவன் - New Jaasmin Banquet Hall உரிமையாளர்), ஜெயகுமாரி ஆகியோரின் அருமைத் தாயாரும்,

உமா, காலஞ்சென்ற ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், அமிர்தவள்ளி, பகவதி, வசந்தாதேவி மற்றும் சுந்தரவள்ளி, தர்மலஷ்மி, மங்கையர்க்கரசி, வாலாம்பிகை (நகுலா), குகநேசபிள்ளை (குகன்), கந்தவேள் (சிவம்), விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராஜதுரை, இராசரட்ணம், கனகரெட்ணம், நாகலிங்கம், அருமைநாயகம், செவ்வேள், யோகச்சந்திரன் மற்றும் சிவலிங்கம், சந்திரகுமாரி, சாந்தலட்சுமி, ராஜேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Neroshan, Amanda, Yobiga- Purushoth, Abinan Ayushi, Dyshny, Tharaneesan, Nathees, Kakon ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Rayna, Maya, Rayana, Jainna, Thiyana ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 01-09-2025 திங்கட்கிழமை முற்பகல் 10:30 - 12:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:45 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/08/2025 04:00)