திரு. மயில்வாகனம் சிவலிங்கம்

மயில்வாகனம் சிவலிங்கம்

தோற்றம்: 23 ஜனவரி 1948 - மறைவு: 05 ஜனவரி 2026

யாழ். சுன்னாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா - இலண்டனை வசிப்பிடமாகவும், தற்பொழுது உடுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் சிவலிங்கம் அவர்கள் 05-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் - இளையபிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான நல்லையா , குணரட்ணம், கனகலிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற யோகராணி, லலிதாம்பிகை (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கேதீசன் - அபிராமி (சுவிஸ்), காலஞ்சென்ற பாமா - சிவசங்கர் (இலங்கை), விவேகாந்தன் (ரமேஸ்) - தனுஜா (கனடா), விஜியாநந்தன் (சுரேஸ்)- ஜெயரூபி (பரிஸ்), குகானந்தன் (குகன்) - கிருசாந்தி (கனடா), இந்துஜா - சுயந்தன் (கனடா)ஆகியோரின் சிறியதந்தையும்,

சங்கவி, சாய்கீத்தியன், தருண், கௌசிகன், சானுஜா , கௌதம், சுயநித்தா , பிரநித்தா , கரிகாலன், ருத்திரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் நடை பெற்று, திருவுடல் மருதனார்மடம் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/01/2026 00:24)