Mr. Mylvaganam Sivapthasundaram

Mylvaganam Sivapthasundaram

Date of Birth: 05 December 1949 - Deceased: 22 November 2025

வவுனியா - வைரவபுளியங்குளத்தைப் பிறப்பிடமாவும, இல- 32 குட்செட் வீதி, வவுனியாவை வசிப்பிமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் சிவபாதசுந்தரம் அவர்கள் 22-11-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம் - நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற முருகேசு - நங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சி. தவமலர் (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. ச. குமுதினி (மருத்துவபீடம், யாழ்ப்பாணம்), மு. சிவாஜினி (உதவி ஆசிரியை, கனடா), இ. தர்சினி (கணக்காளர்-நியூசிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும், 

Dr. சி.சஞ்சயன் (மருத்துவபீடம்,யாழ்ப்பாணம்), ப.முரளிதரன் (கனடா), இரவிதரன் (பொறியியலாளர், நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தரணியா, யதுமிதா, ஆதித்ததன், அக்ஷயன், தனுசாந், ஹரஷஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, பரமேஸ்வரி மற்றும் இராஜேஸ்வரி (ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்), சரோஜனிதேவி, துரைரட்ணம் (ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் இலங்கை வங்கி) காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம், பாலசுப்பிரமணியம் மற்றும் ஜெயதரன்(ஓய்வுநிலை அதிபர், வ /விபுலானந்தா கல்லூரி), தங்கவேலாயுதம், யசோதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 25-11-2025ம் திகதி செவ்வாய்கிழமை இல 32,குட்செட் வீதி வவுனியாவிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக காலை 8:00 மணியளவில் வைக்கப்பட்டு நண்பகல் 12:00 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று தட்சனாங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/11/2025 23:11)