Mr Mylvaganam Thillainarayanan
Deceased: 30 July 2026
யாழ் அச்சுவேலி தம்பாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு மயில்வாகனம் தில்லைநாராயணன் அவர்கள் 30-07-2026ம் திகதி வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் செல்லப்பாக்கியம் தம்பதியரின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான முத்தையா செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
தேவேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற விமலாதேவி, மற்றும் சத்தியதேவி, பாஸ்கரநாராயணன்(ஜேரமனி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
நாகேஸ்வரி, தனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மிகுந்தன்(லண்டன்), நவநீதன்(ஜேர்மனி), மகிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வமலர்(லண்டன்), பாமினி(ஜேர்மனி), சிவலோனி( ஆசிரியை, யா/ அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுலக்ஷ்மன், அபிசனன், சானுஜன், சிபியா, சேயோன், சுஜன் ஆரபி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 02-08-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 1200 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தம்பாலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
சன்னதி வீதி
தம்பாலை,அச்சுவேலி
தொடர்புகளுக்கு:
077 123 4632
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/08/2026 17:20)
