Mr. N. Thuraisamy
Deceased: 02 February 2026
இந்தியா - திருச்சி மாவட்டம் அடைக்கம்பட்டி கிராமம், கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. ந. துரைசாமி அவர்கள் 02-02-2026 திங்கட்கிழமை அன்று காலை 9:30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற உப்புராசி வெ. நடேசபிள்ளை - மாரியாயி அம்மாள் தம்பதியினரின் மகனும்,
காலஞ்சென்ற பரமசிவம்பிள்ளை - சாரதாம்பாள் (கொஸ்லந்தை) தம்பதியினரின் மருமகனும்,
தினேஸ் (அவுஸ்திரேலியா), துஷாந்த் (கனடா), குமரேசன் (Sun Pharmaceuticals- Emerchemi (Pvt) Ltd) ஆகியோரின் பாசமிக்க தகப்பனாரும்,
சர்மிளாவின் மாமனாரும்,
காலஞ்சென்ற சந்திரசேகரன், இராமநாதன் (கேகாலை), கணேசன் (D.M. Jeewan (Pvt) Ltd, கட்டுநாயக்க), ராஜசேகரன் (ரத்னமஹால் ஜீவலர்ஸ், கேகாலை) ஆகியோரின் சகோதரனும்,
சந்திரகுமாரின் மைத்துனரும்,
பாலசுப்பிரமணியம் (கங்கா டெக்ஸ்டைல்ஸ், கண்டி) இன் சகலையும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-04-2026 புதன்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
