Mr. Nachchamuthu Palaniyappan (Mahalingham) Goundar
Date of Birth: 05 December 1956 - Deceased: 01 August 2025
பண்டாரவளை - கோணமுட்டாவவையைப் பிறப்பிடமாகவும், கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாச்சமுத்து பழனியப்பன் கவுண்டர் அவர்கள் 01-08-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாச்சமுத்து கவுண்டர் - கருப்பாய் தம்பதியினரின் செல்வப் புதல்வரும்,
சுசிலா கோகிலவாணி அவர்களின் அன்புக் கணவரும்,
நாச்சியாயின் அன்புச் சகோதரரும்,
செனில்குமார் (New SVS Trade Center, கண்டி), மாலதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கணேஸ் (Ganesh Electronics, ஹட்டன், ASK Cable TV, ஹட்டன்), அகிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாத்தவிகன், உமேஸ்குமார், வித்திஷ், சிதிக்ஷா, அபினேஸ் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-08-2025 சனிக்கிழமை முதல் இல- 98/6, மாபனாவத்தை Circular Road, கண்டி (பூரணவத்த) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் இறுதிக்கிரயைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் உடலம் கண்டி மஹியாவ தகனசாலையில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
