திரு. நடன சபாபதிப்பிள்ளை ஸ்ரீஸ்கந்தராசா (கண்ணன்)

(நியூ சிறிகண்ணன் ஸ்ரோஸ் -திருநெல்வேலி, NSK பழைய சோனகத்தெரு கொழும்பு - 12, NSK சுப்பமாக்கற் திருநெல்வேலி)

நடன சபாபதிப்பிள்ளை ஸ்ரீஸ்கந்தராசா (கண்ணன்)

தோற்றம்: 01 மே 1962 - மறைவு: 22 ஏப்ரல் 2026

யாழ். காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடன சபாபதிப்பிள்ளை ஸ்ரீஸ்கந்தராசா அவர்கள் 22-04-2026 புதன்கிழமை இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற நடனசபாதிப்பிள்ளை - பாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பாலசிங்கம் (கப்புத்தளை வர்த்தகர்) - இராசலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,

பகீரதன் (NSK சுப்பமாக்கற் - திருநெல்வேலி), யாசோதரா (JS Family Mart - சுன்னாகம்), பிரதீபா (கண்ணன் ஸ்ரோஸ் - விஸ்வமடு, BSC அக்கடமி - விஸ்வமடு), கஜானன் (கண்ணன் களஞ்சியம் - திருநெல்வேலி, A/L மாணவன், புனித பரியோவான் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கஷாந்தினி (கணக்காளர் - கொழும்பு), சசிகரன் (பொறியியலாளர் - சுன்னாகம்), செந்தூர்க்கண்ணா (கண்ணன் ஸ்ரோஸ், விஸ்வமடு) ஆகியோரின் மாமனாரும்,

நவலட்சுமி (இலண்டன்), சர்வேஸ்வரி (கிளி/ வெள்ளவத்தை அருளாம்பிகை (ஆனந்தி ஓய்வுபெற்ற தாதிய உத்தியோகத்தர் - வவுனியா), இராசேஸ்வரி (இலண்டன்), யோகேஸ்வரி (யோகு, திருநெல்வேலி), தேவராசா (பாலன், இலண்டன் முன்னாள் எட்மெண்டன் பாலாஜி சுப்பமாக்கற்), காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் (ஓய்வுபெற்ற தபால் அதிபர்), மகாலிங்கம் (கணக்காய்வாளர்), ஞானேஸ்வரன், துரைராசா (தேவன், இலண்டன்), சிவானந்தராசா (ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்), நவமலர் (இலண்டன்), சிவசுப்பிரமணியம் (சிவாபிறதேஸ் மற்றும் மாப்பியன் மில் - மானிப்பாய்). சிவனேஸ்வரி (நவலக்சுமி வவுனியா), சிவஞானம் (ஞானம் களஞ்சியம், திருநெல்வேலி), சிவகௌரி, சிவமணி (மணியம் Co, வவுனியா) ஆகியோரின் மைத்துனரும்,

அஸ்வின், வருண், தருண், லக்சிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-04-2026 வியாழக்கிழமை அன்று திருநெல்வேலி சந்தை வீதியில் உள்ள அவரது இல்லத்தில் முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/04/2026 00:00)