Mr. Nadarajah Aruljothi

Nadarajah Aruljothi

Deceased: 04 March 2026

நீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா அருள்ஜோதி அவர்கள் 04-03-2026 புதன்கிழமை அன்று நீர்கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா - நேசரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற அப்பையா - தங்கம்மா அம்மையார் தம்பதியினரின் மருமகனும்,

உதயராணி (ஜேர்மனி) அவர்களின் அன்பு கணவரும்,

நிரோஜன், நிவேதன், தயானி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியநாதன், சண்முகநாதன், கமலாதேவி மற்றும் கனகாம்பிகை, மல்லிகாதேவி (ஜேர்மனி), சந்திரகுமார், வசந்தகுமாரி (ராசாத்தி), சாந்திமாலா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான யோககுமார், காளிதாஸ் மற்றும் லலிதா, ராஜதுரை (ஜேர்மனி), வத்சலா, கோபால், தவம், காலஞ்சென்ற ஸ்ரீஹரன் (யாழ்ப்பாணம்), நாகுலேஸ்வரன் (நாகுலா நகைக்கடை, யாழ்ப்பாணம்), புலேந்திரன் (சுவிஸர்லார்ந்து), செல்வராணி (யாழ்ப்பாணம்), பாஸ்கரண் (ஜேர்மனி), தயாபரன் (உதயா நகைக்கடை, யாழ்ப்பாணம்), இந்திராணி (யாழ்ப்பாணம்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 10-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று  முற்பகல் 10:00 - 11:30 மணி வரை தளுபத்தை இன்ரசீட் தோட்டத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில்  நடைப்பெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/03/2026 00:00)