திரு. நடராஜா பாலசுப்பிரமணியம் (ராஜீ)
(ஓய்வுபெற்ற சந்தைப்படுத்தல் முகாமையாளர் - Lake House)
மறைவு: 02 ஆகஸ்ட் 2025
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா பாலசுப்பிரமணியம் அவர்கள் 02-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரெட்ணம் நடராஜா - புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிவப்பிரசாட் இராஜநாதன் - பரம்சோதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பவளராணி (ஓய்வுபெற்ற ஆசிரியை - இந்துக் கல்லூரி, பம்பலப்பிட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,
அபிஷாந்தின் பாசமிகு தந்தையும்,
நடேஸ்வரி, பாலரெட்ணராஜா, காலஞ்சென்ற நிர்க்குணானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மேகலாவதி, சுகிர்தராணி, ஜீவராணி ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான நவரெட்ணம், செல்வாம்பிகை ஆகியோரின் மைத்துனரும்,
கண்ணமுத்து ரவீந்திரனின் சகலனும்,
டிலக்ஷி, கமல்ராஜ் ஆகியோரின் அன்பு மாமாவும்,
கமலாம்பிகை, ஷேமிலா, மதுஷாணி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 6.00 மணியளவில் உடலம் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
