திரு. நடராஜா ஜெயபாலா (வௌ்ளாம்பி)
தோற்றம்: 07 மார்ச் 1964 - மறைவு: 28 செப்டம்பர் 2024
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், Mississauga-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெயபாலா நடராஜா அவர்கள் 28-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா-தங்கேஸ்வரி (வௌ்ளையப்பு) தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரரும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்-பூமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
உமா அவர்களின் அன்புக்கணவரும்,
நிருஷன், நிவேதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயதிலகா, ஜெகதீஸ்வரன், ஜெயக்குமார், ஜெயகௌரி, ஜெகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானகரன், கஜேந்திரன், அருளேந்திரன், குணவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகன் 01-10-2024 செவ்வாய்க்கிழமை மாலை 5.00-9.00 மணி வரையும், 02-10-2024 புதன்கிழமை காலை 8.00-9.30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து 9.30 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் புகழுடல் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
