திரு. நடராசா கிருஸ்ணநாதன் (நாதன்)
(யாழ் ஸ்கந்தரோதயக் கல்லூரி பழைய மாணவர், முன்னாள் Eastham KSP Super Store உரிமையாளர், லண்டன் சிற்றி பேருந்து உரிமையாளர்- யாழ்பாணம்)
தோற்றம்: 03 ஆகஸ்ட் 1966 - மறைவு: 22 ஏப்ரல் 2021
யாழ். மல்லாகம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, லண்டன், கொழும்பு, யாழ். மல்லாகம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா கிருஸ்ணநாதன் அவர்கள் 22-04-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா (பொலிஸ் உத்தியோகத்தர்) நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான தாமு, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாராணி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
நிஷாந்தன் (நிஷி), விதுஷன் (விது), யதுஷன் (யது) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருஸ்ணலிங்கம் (லிங்கம்), கிருஸ்ணகுமாரி (வவா), கிருஸ்ணமூர்த்தி (மூர்த்தி), கிருஸ்ணகுமார் (சூட்டி), கிருஸ்ணபவான் (பாபுஜி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இரட்ணராஜா, சிறினிகிலா, கலாவதி, சதீஜா, கஜேந்தினி, விஸ்வலிங்கம், கணேசலிங்கம், சத்தியமூர்த்தி, தெட்சணாமூர்த்தி, கலாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சயந்தன், தீபன், தனுஷன், நிரூஜன், ஜானுப்பிரியா, கஜீபன், கிருஜன், ஷார்மி, கறீஷன், சாருஜன், அபின்ஜா, தான்ஜா, துஷானா ஆகியோரின் சித்தப்பாவும்,
www.tamilthakaval.org
