திரு. நடராசா கிருஷ்ணராசா

நடராசா கிருஷ்ணராசா

மறைவு: 27 மே 2021

டாக்டர் ஆ.நடராசா சுதேச வைத்தியசாலையின் சுதேச வைத்தியரும் சுன்னாகம் டாக்டர் சுப்பிரமணியம் வீதி,யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா கிருஷ்ணராசா அவர்கள் 27-05-2021ம் திகதி வியாழக்கிழமை அன்று அமரத்துவம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற நடராசா- நாகரத்தினம் தம்பதியரின்(சுன்னாகம்) சிரைஷ்ட புதல்வனும்,

காலஞ்சென்ற ஆசிரியர் வாதவூரார் மற்றும் நவமணி (அளவெட்டி ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அருமை மருமகனும்,

வைத்தியர் சம்பூரணராணி (பாப்பாக்கா) அவர்களின் பாசமிகு கணவரும்,

மஹிந்தன் (வடமாகாண கல்வி அமைச்சு), கஜந்தன் (கனடா), அமுதா ஆகியோரின் அருமைத் தகப்பனாரும்,

தாரணி, சுதர்சினி (கனடா), சாந்தன் (ஆஷார் நகையகம்,சுன்னாகம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சந்திரராசா(கனடா), மோகனராசா(பல்வைத்தியர்,கொழும்பு), காலஞ்சென்ற பவாணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவிமலாதேவி(கனடா), குகனேஸ்வரி(பல்வைத்தியர்,கொழும்பு), கருணாகரன், கலாதரன், லோகதரன், காலஞ்சென்ற திவாகரன் மற்றும்  தயாபரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாருன்யா, சிவலக்சன்(லங்கா சித்தவைத்தியக்கல்லூரி), அருண்யா(வருமானப் பரிசோதகர்-வலி தெற்கு பிரதேச சபை), காருண்யா, வருண்யா(யாழ்.சுன்னாகம் ஸ்கந்தவரோயாக் கல்லூரி), யதுசாந்தன், டினோஜன் (கனடா), டினூசன் (கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் சுன்னாகம் டாக்டர் சுப்பிரமணியம் வீதியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பிற்பகல் நான்கு மணியளவில் தகனக்கிரிகைக்களுக்காக சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
சாந்தன் மருமகன்:   +94 77 967 1330
கலாதரன்  மைத்துனர்: +94 71 856 1623
தயாபரன் மைத்துனர்:  +94 77 621 3296

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/05/2021 02:32)