திருமதி. நடராஜா மீனாட்சி

நடராஜா மீனாட்சி

தோற்றம்: 04 பெப்ரவரி 1948 - மறைவு: 06 ஜனவரி 2026

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி - பெர்லினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராஜா மீனாட்சி அவர்கள் 06-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு - சிவக்கொழுந்து (சின்னம்மா) தம்பதியினரின் பாசமிகு புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

நடராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஞானாம்பாள், சுந்தராம்பாள், நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருந்தவமலர், கிருபாகரன், சிவமலர், ரதிமலர், நவநீதன், காலஞ்சென்ற குன்றூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11:00 - 2:00 மணி வரை Feirehallen Krematorium Ruhleben (Am Hain 1, 13597 Berlin, Germany) இல் நடைபெறும்

முகவரி:-

Steinmetzstraße 76,

10783 Berlin, Germany.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/01/2026 00:00)