Mr. Nadarajah Navenarajah

(ஜோஸ் மில் முன்னாள் உரிமையாளர்)

Nadarajah Navenarajah

Deceased: 20 November 2025

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும்,  முருகமூர்த்தி கோவில் வீதி, சங்கரத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா நவீனராஜா அவர்கள் 20-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா - பொன்மலர் தம்பதியினரின் இரண்டாவது மகனும், காலஞ்சென்றவர்களான ஏரம்பமூர்த்தி - அன்னலட்சுமி தம்பதியினரின் மூத்த மருமகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ஜோய் நற்குணவதி, ரீட்டா (கனடா), காலஞ்சென்ற நேசபரன், நந்தினி (கனடா), காலஞ்சென்ற நேசராஜா, நவீனி (கனடா), முத்தழகன் (ஜோய் பாமசி, பண்டத்தரிப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரன், தவநேஸ்வரன் (கனடா), யோகராணி (அவுஸ்திரேலியா), இந்திராணி (கனடா), திலகராணி (கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

கஜீவன் ஐகனடா), சுஜீவன் (விமானப்படை), நயனி (கனடா), ஜனனி (இந்தியா), மனோஜன் (அவுஸ்திரேலியா), வினோஜன் (அவுஸ்திரேலியா), வித்தியா (கனடா), சுபோஜினி (அவுஸ்திரேலியா), ஆரணி (கனடா) ஆகியோரின் மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-11-2025 வௌ்ளிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/11/2025 00:00)