திரு. நடராஜா புவிராஜசேகரம்

(இளைப்பாறிய ஆசிரியர் - கொக்குவில் இந்துக் கல்லூரி, கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி)

நடராஜா புவிராஜசேகரம்

தோற்றம்: 22 டிசம்பர் 1947 - மறைவு: 25 ஜூன் 2026

யாழ் கொக்குவில், நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நடராஜா புவிராஜசேகரம் அவர்கள் 25-06-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா - ஜெயரூபி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கலைவதனி (இளைப்பாறிய ஆசிரியை - கொழு. விவேகானந்தா கல்லூரி) அவர்களின் ஆருயிர் கணவரும்,

விவேக், திசோக், பிரதீபா, ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நளாயினி, நிவித்தா, இம்மானுவேல் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

சவீனா, கானில், கிர்த்திக், சர்வின், தனிஷா, அனிக்ஷா, இவான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற சந்திரசேகரம், பரராஜசேகரம், ஜெயராஜசேகரம், லலிதா தங்கமலர், காலஞ்சென்ற ஸ்ரீ சோமசேகரம், லீலா ஜெகமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கலைச்செல்வம், கலைஈசன், கலைஜீவன், கலைக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-06-2026 அன்று சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் இரவு 10:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு,  28-06-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 71 486 0762

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/06/2026 00:00)