திருமதி. நடராஜா சறோயினிதேவி

நடராஜா சறோயினிதேவி

தோற்றம்: 26 பெப்ரவரி 1936 - மறைவு: 22 ஜனவரி 2026

யாழ். நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராஜா சறோயினிதேவி அவர்கள் 22-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - அருளம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா - முத்தம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

செல்லையா நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

நிர்மலன், நிரஞ்சினி, நந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தனேசமலர், வைகுந்தவாசன் (SAM), நந்தினி ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், சாம்பசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சதன், நிரோசா, சுபேதா, கிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கமலாதேவி(லண்டன்), தவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்தினியும்,

தில்லைநாயகி (தில்லை), நாகநாதன் (ரவி), சீறீகரன் (இலண்டன்), சுமதி ஆனந்தராஜா (இலண்டன்), நாகேஸ்வரன் (அவுஸ்திரேலியா), சிவகுமார் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற நாகேஸ்வரி, சிவபாதசுந்தரம் ஆகியோரின் பாசமிகு மாமியும்,

யசோதையம்மை (வள்ளிப்பிள்ளை -இலங்கை), காலஞ்சென்ற மங்கையற்கரசி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00  மணி வரையும், 26-01-2026 திங்கட்கிழமை முற்பகல் 11:00 - 12:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/01/2026 00:00)