Mr. Nadarajah Vishwanathapillai

Nadarajah Vishwanathapillai

Date of Birth: 17 September 1943 - Deceased: 20 September 2026

யாழ். வல்வெட்டித்துறை “காட்டுவளவை” பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை அரசடி–நெடியகாடு, மயிலியதனை, கொழும்பு மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் வசித்தவருமான திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை அவர்கள் 20-09-2026 ஞாயிற்றுக்கிழமை புரட்டாதி மாத வளர்பிறை தசமி திதியில் இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா (ராசதுரை) - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

ராணிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற மாவீரர் குமுதினி (பிரியங்கா), சாந்தினி (கனடா), நந்தினி (இலண்டன்), ஜமுனா (இலண்டன்), மகேந்திரகுமார் (மாச்சா - இலண்டன்), தவச்செல்வி (அம்மன் - சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

பிரபாகரன் (கோபி - கனடா) , காலஞ்சென்ற செல்வச்சந்திரன் (செல்வன் - இலண்டன்), கணேசலிங்கம் (பாபு - இலண்டன்), ஜெயந்தி (இலண்டன்), பாலசேகர் (பாலையா - சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சுவேனியா, அனோஜன், கௌதம், தனுஜன், அபிராமி, சஞ்சீவ், அபிநயா, மயூரா, தீபக், தீபிகா, அரவிந்த், பூவரசன், சகானா, திருமொழி, அர்ஜுன், சாருகன், மற்றும் வினோத், தனுஷன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,

நிலா, இனியா ஆகியோரின் அன்புப்பூட்டனாரும்,

காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரமூர்த்தி, தணிகாசலம் (கலாநிதி ஸ்டோர்ஸ்), திருநாவுக்கரசு (சந்திரா ஸ்டோர்ஸ்), சுந்தரமூர்த்தி, ஜெயலக்ஷ்மி (தங்கன்) மற்றும் தங்கராசா (தங்கராசா கடை - வல்வெட்டித்துறை), ராமச்சந்திரன் (ராமு கடை – வல்வெட்டித்துறை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான காந்திமதி, குகதாஸ், சோதிமதி, பூலோகசுந்தரி, மெஞ்ஞானமாலை, தையல்நாயகி, யோகராஜா, சின்னத்துரை, சந்திரசேகரம், மற்றும் ஜெயமணிதேவி, ராஜேஸ்வரி, இந்திராணி, பேரின்பநாயகி , சுலோசனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற தம்பதிகள் சுந்திரலிங்கம்-இந்திராதேவி-சாரதாதேவி, சிவகணேசன்-மகமாசிஅம்மா, முத்துலிங்கம்-சிவகாமசுந்தரி, கணேசரத்தினம்-பிறேமாவதி, காலஞ்சென்ற சோதிநாராயணசாமி (பரஞ்சோதி அப்பா) - பாருபதிதேவி ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:30 - 12:00 மணி வரை  Thomas Wall Centre (52 Benhill Avenue, Sutton SM1 4DP) பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளை தொடர்ந்து பிற்பகல் 2:20 மணியளவில் திருவுடல்  South London Crematorium (Rowan Road, Streatham London SW16 5JG) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

மகேந்திரகுமார் (மகன்):- +44 795 028 5251
சதாசிவம் (ஐயாச்சி-பெறாமகன்):- +94 75 958 7834
பிரபாகரன் (கோபி-மருமகன்):- +1 514 594 6563
கணேசலிங்கம் (பாபு-மருமகன்):- +44 772 704 6074
பாலசேகர் (பாலையா-மருமகன்):- +41 787 671 835

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/10/2026 00:00)