Mr. Nadarajaha Kanagaranjithan

(உரிமையாளர் - Ranjan Suppliers & Building Contractor)

Nadarajaha Kanagaranjithan

Date of Birth: 27 November 1940 - Deceased: 09 April 2024

யாழ். தெல்லிப்பளை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா கனகரஞ்சிதன் அவர்கள் 09-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா - தெய்வநாயகி அம்பாள் (சுபத்திரை) தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பு - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,

லிங்கேஸ்வரி (லிங்கா) அவர்களின் அன்புக்கணவரும்,

ரூபிணி, பிரணவன், அனுசியா, அபிராம் ஆகியேராின் பாசமிகு தந்தையும்,

ரூபாபாலனனின் மாமனாரும்,

ஆதித்தியமாறனின் பேரனும்,

காலஞ்சென்றவர்களான கனகேஸ்வரி (ஆசிரியை), கனகேஸ்வரன், கனகசந்திரன், கனகராணி, கனகசேகரம், கனகபவன், கனகசாந்தி (சாந்தி) ஆகியோரின் சகோதரனும்,

மகேஸ்வரி, லலிதாதேவி, வரதட்சிணி, காலஞ்சென்ற சின்னத்தம்பி (ஆசிரியர்), சரஸ்வதி (சரசு - ஆசிரியை), ஜெயவர்தன ஆகியோரின் மைத்துனரும்,

சரஸ்வதி, ராஜேஸ்வரி (ராயேஸ்), அம்பிகாதேவி (அம்பிகா), காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் (எட்டர்), தாமோதரம்பிள்ளை, சிவராஜா, காமலாதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் புகழ் உடல் உற்றார், உறவினர், நண்பர்கள் அஞ்சலிக்காக பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 10-04-2024 புதன்கிழமை அன்று பிற்பகல் 1.00 மணி முதல் வைக்கப்பட்டு, 11-04-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் தகனக்கிரியைகள் பொரளை இந்து மயானத்தில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/04/2024 04:00)