திரு. நடராஜா மகாதேவன்

நடராஜா மகாதேவன்

தோற்றம்: 02 ஜூன் 1941 - மறைவு: 01 நவம்பர் 2024

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை மேற்கு, அவுஸ்திரேலியா சிட்னி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா மகாதேவன் அவர்கள் 01-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா-இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சீனித்தம்பி-சிவபுரம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

மகிந்தன், தர்ஷன், சுஜீர்த்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தக்‌ஷயாணி, சுகன்னியா, சதீஷ்கரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, இராஜலிங்கம், கமலேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி, சற்குணேஸ்வரி, நிர்மலேஸ்வரி, காலஞ்சென்ற பத்மநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு, கனகசபை, இராசதுரை, சுப்பிரமணியம், சபாரட்ணம், பொன்னம்பலம் மற்றும் மகேஸ்வரி, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மகிபனா, மகிஜனன், தர்னேஷ், தர்லேஷ், தர்னியா, சிராஷன், சிரோஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-11-2024 திங்கட்கிழமை அன்று நண்பகல் 12.30-1.30 மணி வரை Macquarie Park Cemetery and Crematorium (Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.   

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/11/2024 04:00)