திரு. நடராசா அம்பிகாநிதி
(உரிமையாளர் - A.V. Fancy House, சங்கானை, சந்தை வியாபாரி)
தோற்றம்: 10 ஜூன் 1948 - மறைவு: 25 டிசம்பர் 2025
யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், குளத்தடி வீதி, சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா அம்பிகாநிதி அவர்கள் 25-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், கார்த்திகேசு - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
வதனாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற கோமவதி, சிவநேசம், இன்பமலர் ஆகியோரின் சகோதரனும்,
குணேஸ் (இளைஞர் சேவை அதிகாரி - மாவட்டக் காரியாலயம், நெடுந்தீவு), மதிபன் (சங்குநாதம் Fancy House), பாலகிருஷ்ணன் (ஊழியர் - பிராந்திய காரியாலயம், (வட பிராந்தியம்), தேசிய சேமிப்பு வங்கி) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
தனபாலசிங்கம், செல்வராசா, நவரட்ணம், தர்மகுலசிங்கம், சிறீதரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-12-2025 வெள்ளிக்கிழமை மதியம் 1:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சங்கானை கரைச்சி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
