Mr. Nadarasa Arulaiya
Date of Birth: 06 April 1934 - Deceased: 02 November 2026
யாழ். கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நடராசா அருளையா அவர்கள் 02-11-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா - சின்னப்பிள்ளை தம்பதியினரின் இளைய மகனும், காலஞ்சென்ற பொன்னையா - முத்துப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற நாகமுத்து அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஷ்ணானந்ததேவி (ஜேர்மனி), அழகானந்ததேவி, யோகானந்ததேவி, இந்திராதேவி (இலண்டன்), கந்தசாமி (பிரான்ஸ்), கிருஷ்ணசாமி (சின்னராசு) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
காலஞ்சென்ற நடராசா, இராசகிளியன், கந்தசாமி, தயாபரன் (இலண்டன்), கோவதனி (பிரான்ஸ்), கவிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிறிசசிகரன் (ஜேர்மனி), தபோதரன் (ஜேர்மனி), விந்துஜன், தனுஷா (தென்மராட்சி மேற்கு ப.நோ.கூ.சங்கம் கைதடி) சுவனிகா (மாணவி - யாழ். இந்துமகளிர் கல்லூரி), கார்த்திகா (ஜேர்மனி), துசிபா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேரனும்.
தாரகாவின் (ஜேர்மனி) அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கம், சங்கரப்பிள்ளை, கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற குணராஜசிங்கம், தனபாலசிங்கம் ஆகியோரின் சிறிய தந்தையாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, அன்னமுத்து, செல்வரத்தினம், அப்பையா ஆகியோரின் மைத்துனரும்,
சிவமலர், நேசராணி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-11-2026 புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கைதடி ஊற்றல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
