Mr. Nadarasa Arunthavarasa
Deceased: 24 November 2026
யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நடராசா அருந்தவராசா அவர்கள் 24-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நெடுங்கேணி நடராசா - காசுபதி தம்பதியினரின் அன்பு மகனும்,
ஜெயரூபி அவர்களின் அன்புக் கணவரும்,
ரிசாந், நிரேகா ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் 26-11-2026 வியாழக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
