Mr. Nadarasa Gunabalasingham (Kadavul)

Nadarasa Gunabalasingham (Kadavul)

Date of Birth: 04 January 1958 - Deceased: 16 December 2025

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா குணபாலசிங்கம் அவர்கள் 16-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன் - கமலாதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பிறேமா அவர்களின் அன்புக் கணவரும்,

நிசாந்தன் (சுவிஸ்), டினோஜா (இலண்டன்), நிஷாந்தினி (பிரான்ஸ்), ஜெனனி (சுவிஸ்), கஸ்தூரி ஆகியேராின் பாசமிக்க தந்தையும்,

சபிதா, சஜிந்தன், கஜந்தன், செந்தூரன், தர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனிக்கா, அஸ்மிதா, சஜித், சாத்விகா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களான புஸ்பராணி, புஸ்பமலர், உருத்திரசிங்கம் மற்றும் தனபாலசிங்கம் (சுவிஸ்), சரோஜினிதேவி, அம்பிகை, அம்பாலிகை, பவானி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, செகராசா மற்றும் தர்மா, காலஞ்சென்ற பத்மரஞ்சன், சிவபாலசுப்பிரமணியம், மேனன், புனிதராசன் ஆகியோரின் மைத்துனரும்,

பாமா (சுவிஸ்) அவர்களின் மச்சானும்,

நிசாந்தனின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-12-2025 புதன்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் கோண்டாவில் நாகபூசணி அம்மன் வீதியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோண்டாவில் கட்டையடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/12/2025 00:00)