திருமதி. நடராசா கமலாதேவி (கமலா)
மறைவு: 03 ஜூலை 2025
யாழ். வேலணை கிழக்கு செல்வநாயகம் வீதியை பிறப்பிடமாகவும், இல- 81/6 பிறவுண் ரோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராசா கமலாதேவி அவர்கள் 03-07-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பொன்னையா நடராசா (சமூக சேவையாளர், ஓய்வு நிலை அதிபர்) அவர்களின் அன்பு துணைவியாரும்,
கவிராஜ் (கவி - ஓய்வுநிலை பல்கலைக்கழக பேராசிரியர், இந்தியா), மஞ்சுளா (பொது முகாமையாளர் - யாழ் மாவட்ட விவசாய நுகர்ச்சி பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்) ஆகியோரின் அன்பு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகம், கைலாயபிள்ளை (ஓய்வுநிலை அதிபர்), மாணிக்கவாசகர் (ஓய்வுநிலை ஆசிரியர்) மற்றும் மூத்ததம்பி (கனடா) ஆகியோரின் அன்புத் தங்கையும் ஆவார் .
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 04-07-2025 வெள்ளிக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
