Mr. Nadarasa Mayuran

(அதிபர் - யாழ். நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகா வித்தியாலயம்)

Nadarasa Mayuran

Date of Birth: 25 October 1978 - Deceased: 28 May 2026

யாழ். நயினாதீவு 6ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் தற்போது இல- 21/ID, கலட்டி முந்தல் லேன், கொக்குவில் கிழக்கை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திரு. நடராசா மயூரன் அவர்கள் 28-05-2026 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்அதார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா (ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்) - குணபூஷணி தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற நாகராசா - மதிவதனி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

சகிலா (ஆசிரியை - யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி) அவர்களின் பாசமிகு கணவரும்,

அபிவர்ஷினி (A/L 2025 கணிதப் பிரிவு மாணவி - யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை), கஜவர்ஷன் (O/L 2025 மாணவன் - யாழ். இந்துக் கல் லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுரநுதா (ஆசிரியை), சோபிதா (ஆசிரியை), நர்த்தனன் (ஆசிரியர்), பிரணவன் (பிரதிக் கட்டுப்பாட்டாளர்-குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சுசந்த, நந்தகுமார், வேணுயா (முன்பள்ளி ஆசிரியை), மஞ்சுளா (ஆசிரியை), தயானந்தி, மதுஷன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனரும்,

அயிலவன், ரெசாதி, கிர்சிகா, சதுர்ஷன், ரதுர்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருஷ்ணவி, அக்ஷ்ணவி, ஆருஷ்ணவி, நிதுர்ஷன், சிவானுயா, தர்சிகா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி கனகம்மா, சொர்ணலிங்கம் - சரஸ்வதி, காலஞ்சென்ற மயில்வாகனம், சவுந்தரம், காலஞ்சென்ற பெரியநாயகி ஆகியோரின் பெறாமகனும்,

ஆறுமுகம் திலகவதி, கதிரேசபிள்ளை வரதலெட்சுமி, காலஞ்சென்ற இந்துமதி மற்றும் விக்கினேஸ்வரன் -சிவசக்தி ஆகியோரின் மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-06-2026 திங்கட்கிழமை அன்று காலை 07.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 938 9437

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/05/2026 00:00)