Mrs. Nadarasa Nithyaletchumi
Deceased: 14 August 2024
யாழ். காரைநகர் வலந்தலை மாப்பாணவூரி நெடுங்காட்டை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராசா நித்தியலெட்ச்சுமி அவர்கள் 14-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான (மலாயன் பென்சனியர் அடைவுகடை) தம்பிப்பிள்ளை-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை-பரிமளம் தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
நிரஞ்சனி (கனடா), நந்தினி, நந்தகுமார் (கனடா) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
விவேகானந்தன், உருத்திரன், நந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஷாம்பவி, விக்ரம், அரவிந்தன் ஆகியோரின் பேத்தியும்,
வாமதேவன், வரதராசன், காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, சுந்தரமூர்த்தி, செல்வலெட்சுமி, தனபாலன், கருணாகரன் ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
ராஜேஸ்வரி, சுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம்பிள்ளை, சரஸ்வதி, சிவபாக்கியம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 18-08-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் பார்வைக்கு வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
