திரு. நடராசா இராஜேஸ்வரன்

(அபிவிருத்தி இணைப்பாளர்- பிரதேச செயலகம் யாழ்ப்பாணம்)

நடராசா இராஜேஸ்வரன்

மறைவு: 23 அக்டோபர் 2024

யாழ். "ஈஸ்வரபவனம்" கதிர்காம கோவிலடி, வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், இல-92, யாழ் ரோட், நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா இராஜேஸ்வரன் அவர்கள் 23-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா-நாகேஸ்வரி தம்பதியினரினஅன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வீரசிங்கம்-இராசமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

உஷாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

நிகாஷன் (யாழ்.இந்துக்கல்லூரி-ஆண்டு 10 மாணவன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஈஸ்வரன், தயாளேஸ்வரன் (டென்மார்க்), சிவனேஸ்வரன் (கனடா), ஜெகதீஸ்வரி (நியூசிலாந்து), சர்வேஸ்வரன் (பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்-பிரதேச செயலகம்-யாழ்ப்பாணம்), இராஜேஸ்வரி (அபிவிருத்தி உத்தியோகத்தர்-பிரதேச செயலகம்-கரவெட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ஜெகதீஸ்வரன் (ஜேர்மனி), விமலரதி, நித்தியகலா, ஶ்ரீதரன் (ஶ்ரீராம ஜீவலர்ஸ், கொனிக்கா கலர்லாப்), விஜயகுமாரி, ரவீந்திரகுமார் (இலண்டன்), ஜெயசீலன் (சானுகா ஜீவலர்ஸ்), ஶ்ரீசக்திவேல் (சிறி மீனாட்சி ஜீவலர்ஸ்), நிகிலா ஆகியேராின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-10-2024 வியாழக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பிற்பகல் 3.00 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

   அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/10/2024 04:00)