Mr. Nadarasa Sritharan
(Retired Principal)
Deceased: 23 February 2026
யாழ். கலட்டியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா சிறிதரன் அவர்கள் 23-02-2026 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா - யோகரெத்தினம் தம்பதியினரின் மூத்த புதல்வரும்,
இரத்தினம் - கண்மணி தம்பதியினரின் மூத்த மருமகனும்,
விஜயதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
ராதிகா (ஆசிரியை - யாழ். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்), சதீஸ் (வருகை தரு விரிவுரையாளர் - தொழிநுட்பவியல் கல்லூரி, யாழ்ப்பாணம்), கார்த்திகா (ஆசிரியை - யாழ். முத்துத்தம்பி மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மேலும், சசிதரன் (Royal Electronics, நெல்லியடி), கீதா, செல்வமகேசன் (ஆசிரியர் – கொக்குவில் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிறீச்சந்திரமோகன், லலிதாதேவி, லீலாதேவி, சுகந்தாதேவி, யசோதாதேவி, சிறிரஞ்சன் ஆகியோரின் அன்பு பெரியண்ணாவும்,
அன்பரசி, காலஞ்சென்ற மகாலிங்கம், சிவப்பிரகாசம், குணபாலசிங்கம், கமலேஸ்வரன், கலாவாணி, காலஞ்சென்ற வரதராஜா, கமாலதேவி, காலஞ்சென்ற பேரின்பதேவி, லீலாதேவி, பரிமளதேவி, நற்குணராசா, பத்மாதேவி, காஞ்சனாதேவி, லதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிரூபன் (Computer Science, University of Colombo), நிரோஷிகா (Faculty of Medicine, University of Jaffna), கலாபன் (யாழ். இந்துக் கல்லூரி), சௌமியா (யாழ். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை), சிவப்பிரியன் (யாழ். இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-02-2026 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு குடும்பத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.
தகவல்:- குடும்பத்தினர்.
67/8, ஐயனார்கோவில் வீதி,
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்.
**************
யாழ். கலட்டியைப் பிறப்பிடமாகவும் வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற அதிபர் திரு. நடராசா சிறிதரன் அவர்களின் மறைவு எம்மனைத்தையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
யா/செட்டித்தெரு அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபராகப் பணியாற்றிய அவர், கல்வியை ஒரு புனிதப் பொறுப்பாகக் கருதி மாணவர்களின் அறிவியல் முன்னேற்றத்திற்கும் ஒழுக்க வளர்ச்சிக்கும் அர்ப்பணிப்புடன் உழைத்தார். நூற்றுக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி, நல்ல குடிமக்களாக உருவாக்கிய சிறந்த கல்வியாளர் அவர்.
அவரது அமைதியான நடத்தை, அன்பான வழிகாட்டுதல், கடமையுணர்வு மற்றும் மனிதநேயம் என்றும் மறக்கமுடியாதவை.
அன்னாரின் மறைவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
ஆழ்ந்த இரங்கலுடன் கண்ணீர் அஞ்சலி.
www.tamilthakaval.org
