Mr. Nadarasa Udayabalan

Nadarasa Udayabalan

Date of Birth: 12 August 1971 - Deceased: 24 October 2025

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல-24,2/5, தயா ரோட், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா உதயபாலன் அவர்கள் 24-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா - சற்குணவதி தம்பதியினரின் அன்பு மகனும், 

சிவபாலன் (கனடா), பத்மசோதி (பிரான்ஸ்), சிவசோதி (கொழும்பு), நவசோதி (டென்மார்க்), காலஞ்சென்ற ஞானசோதி ஆகியோரின் அன்புத் தம்பியும்,

விக்கினேஸ்வரி (கனடா),  தட்சணாமூர்த்தி (பிரான்ஸ்), காலஞ்சென்ற சந்திரகுமார் ஆகியோரின் மைத்துனரும்,

டிவிசன், நிக்ஷன், சிபாசினி ஆகியோரின் அன்பு சித்தாப்பாவும், 

வேணுகா, அபிநயா, தனுஷன், விதுஷன், திரிஷா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-10-2025 திங்கட்கிழமை அன்று காலை முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/10/2025 00:00)