திருமதி. நடராசா வள்ளியம்மை

நடராசா வள்ளியம்மை

மறைவு: 14 மார்ச் 2026

யாழ். நெடுந்தீவு கிழக்கு 13ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்றுறையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நடராசா வள்ளியம்மை அவர்கள் 14-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - தெய்வானை தம்பதியினரின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான பிரபல ஆயுர்வேத வைத்தியர் விசுவாசம் கார்த்திகேசு - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்

காலஞ்சென்ற விசுவாசம் கார்த்திகேசு நடராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,

குணமணி, லீலாவதி (ஓய்வு நிலை மருத்துவ தாதி, அக்கராயன்), இராசதுரை (ப. நோ. கூ சங்கம், அக்கராயன்), நடேஸ்வரி, கோசலாதேவி, மங்கையர்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரியும்

கம்ஷவதனி (ஓய்வு நிலை ஆசிரியை - யாழ்.நாவாந்துறை றோ.க. வித்தியாலயம்), குமுதினி (இராமநாதபுரம்), விந்தன் கனகரட்ணம் (முன்னாள் உறுப்பினர் வலிகாமம் தெற்கு பிரதேசசபை சுன்னாகம், யாழ் மாநகரசபை, வடக்கு மாகாணசபை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி), ரஞ்சினி (பரிசாரகர் பிரதேச வைத்தியசாலை வேலணை), பத்மினி (அம்பலப்பெருமாள்குளம்), வரதராஜன் (நெடுந்தீவு), மாவீர்களான யோகமலர் (பவளமொழி 2ம் லெப்டினன் சாரா), சாந்தினி (லெப்டினன் சாவித்திரி) மற்றும் டெனிஸ்ராஜன் (முன்னாள் உறுப்பினர் கிளி,கரைச்சி பிரதேசசபை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி), சறோஜினி (ஊர்காவற்றுறை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிறீ கணேசராசா, யோகராசா, மற்றும் உஷாந்தினி, நாகமூர்த்தி, தர்மராசா, சந்திரதிலகம் (உப தபாலதிபர், நெடுந்தீவு), ஜசிந்தா (பணியாளர் சிவில் பாதுகாப்பு திணைக்களம், கிளிநொச்சி) ஜெயபாலன் (நூலக கவனிப்பாளர் யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜீவராஜ் (ஜேர்மனி), சத்தியராஜ் (தபால் ஊழியர் கிளிநொச்சி, தபால் நிலையம்), நிலோஜினி,(பொறியியலாளர், மொறட்டுவை பல்கலைக்கழகம்), உஷாந்தினி (World Vision Kilinochchi, கிளிநொச்சி) காலஞ் சென்ற நிஷாந்தன்,மற்றும் நிதர்சினி (இத்தாலி) நிதர்சன் (பிரான்ஸ்), சஞ்சிகா (ஜேர்மனி), ஏஞ்ஜலின் விதுஷா (ஆங்கில ஆசிரியை சுவிஸர்லாந்து), ஏஞ்ஜலின் லவணிக்கா, ஏஞ்ஜலின் வெரோனிக்கா (BBA யாழ் பல்கலைக்கழகம், மார்க் அன்ரனி (2ம் வருட முகாமைத்துவ பீட மாணவன் - யாழ். பல்கலைக்கழகம்), ரமேஷ்ராஜ், ஜெயராஜ் (BA) விதுராஜ்,(உடற்கல்வி ஆசிரியர் கிளி. இரணைதீவு றோ.க. வித்தியாலயம்), ரஜீவ்ராஜ், லிவினியா மற்றும் காலஞ்சென்றவர்களான டினோசன், டினுசிகன், மற்றும் ஆன் டிலக்‌ஷினி, ஆன் டினுஷா, டினுஷிகன், தஸ்மிகன், சரண்ராஜ் (மாணவன் - மட்டு. தாழங்குடா கல்வியற் கல்லூரி) பரன்ராஜ், சரண்ஜா (மாணவி பல்கலைக்கழகம், மட்டக்களப்பு) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அத்விகா (ஜேர்மனி), ரித்திக்கா (சுவிஸர்லாந்து), ஆர்த்திகா (சுவிஸர்லாந்து), சித்தார்த் (சுவிஸர்லாந்து), அஸ்விந்த், அத்விக், அபிஷா (பிரான்ஸ்), தருண் (பிரான்ஸ்), கெவின் (பிரான்ஸ்), மோனிஷா, நிவாஸ், சஸ்மிகாராய், அனிஷா (இத்தாலி), அக்சரன் (இத்தாலி), சியா (இத்தாலி), நிக்கிஷன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் இல- 180, யாழ். பிரதான வீதியில் அமைந்துள் வைற் ஹவுஸ் மலர்ச்சாலையில் 17-03-2026 செவ்வாய்க்கிழமை காலை வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதே தினம் காலை 8.00 மணியளவில் மலர்ச்சாலை பொது மண்டபத்தில் இறுதி கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல்  நெடுந்தீவு கிழக்கு கட்டைராமன் சல்லி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/03/2026 00:00)