Mrs. Nadarasa Vartheswary
Date of Birth: 27 September 1945 - Deceased: 19 June 2026
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நடராசா வரதேஸ்வரி அவர்கள் 26-06-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - கமலம் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா - கண்ணகை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
நடராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவனேசசெல்வராசா, காசிலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மங்களநாயகி, றஜனி, ஜெயந்தி, சுயேந்தி, சாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தில்லைநாதன், சிவகுமார், காலஞ்சென்ற திருவருட்செல்வம் (அப்பன்), கேதீஸ்வரன் (சேந்தன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மதிகரன், கயல்விழி, ரஜீவன், றதீஸ், நர்த்தனா, நர்மதா, கீர்த்தனா, சஞ்சீவன், பிரசாம், ஜிதுஷா, விஷாளன், சமிரன், மதுமதி, சதுர்த்திகன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
ஹர்னி, மகிழன் ஆகியோரின் அன்பு பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், பார்வதி, திருச்செல்வம், நாகபூசணி, றதி மற்றும் மலைமணி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தவள்ளி, நாகேஸ்வரி, சிவசம்பு, பரமலிங்கம் ஆகியோரின் சகலியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-07-2026 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் இல- 218, ஆடியபாதம் வீதி கொக்குவிலில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சுருவில் இந்து மாயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
