திரு. நடராசா வேல்நாயகம்

(ஓய்வு பெற்ற பொறியியலாளர் வீதி அபிவிருத்தி திணைக்களம், வவுனியா)

நடராசா வேல்நாயகம்

தோற்றம்: 25 டிசம்பர் 1934 - மறைவு: 09 ஏப்ரல் 2026

யாழ். வீரமாணிக்கதேவன்துறை மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், இல- 15/50, பாடசாலை வீதி, மூன்றுமுறிப்பு, வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா வேல்நாயகம் அவர்கள் 09-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நடராசா - இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், சோமசுந்தரம் - சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,

லக்சுமிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. இராசசேகரன் (மட்டக்களப்பு ஆரயம்பதி வைத்தியசாலை), வானதி, பாமினி (மருந்தாளர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr. ஜெயசிறிமாலினி (மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை), சிவநேசன், கருணாகரன் ஆகியோரின் மாமனாரும்,

ஆர்த்தி, அனிர்தா, சருண்யா, அபிசாயினி, அரவிந் ஆகியோரின் பேரனும்,

தம்பித்துரைச்சாமி காலஞ்சென்ற ரத்தினசிங்கம், ராஜரட்ணம், நாகேஸ்வரி அம்மா, தேவராணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

நேசமலர், முருகவேள், கனகராணி, காலஞ்சென்ற நகுலேஸ், காலஞ்சென்ற பரமகுரு, சத்தியேஸ்வரி, சகுந்தலாதேவி, சித்ராதேவி, இன்பகுரு, கனகாம்பிகை ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் வவுனியா, மூன்று முறிப்பு இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, திருவுடல் பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/04/2026 00:00)