திரு. நடராசா விஸ்வநாதபிள்ளை (தம்பி அண்ணா)
தோற்றம்: 17 செப்டம்பர் 1943 - மறைவு: 20 செப்டம்பர் 2026
யாழ். வல்வெட்டித்துறை “காட்டுவளவை” பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை அரசடி–நெடியகாடு, மைலியதணை, கொழும்பு மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் வசித்தவரும், அனைவராலும் அன்புடன் “தம்பி – அண்ணா” என அழைக்கப்பட்டவருமாகிய திரு. நடராசா விஸ்வநாதபிள்ளை அவர்கள் 20-09-2026 ஞாயிற்றுக்கிழமை, புரட்டாதி மாத வளர்பிறை தசமி திதியில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா (ராசதுரை) - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம் - சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
ராணிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
மாவீரர் குமுதினி (பிரியங்கா), சாந்தினி, நந்தினி, ஜமுனா, மகேந்திரகுமார், தவச்செல்வி ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரமூர்த்தி, தணிகாசலம் (கலாநிதி ஸ்டோர்ஸ்), திருநாவுக்கரசு (சந்திரா ஸ்டோர்ஸ்), சுந்தரமூர்த்தி, தங்கராசா (வல்வெட்டித்துறை), ஜெயலக்ஷ்மி (யோகராஜா) மற்றும் ராமச்சந்திரன் (ராமு கடை - வல்வெட்டித்துறை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
மகேந்திரகுமார் (மகன்):- +44 795 028 5251
சதாசிவம் (ஐயாச்சி):- +94 75 958 7834
பிரபாகரன் (கோபி):- +1 514 594 6563
கணேசலிங்கம் (பாபு):- +44 772 704 6074
பலசேகர் (பாலையா):- +41 787 671 835
www.tamilthakaval.org
