திரு. நடராசா யோகராஜா
(ஓய்வுபெற்ற மருந்தாளர்)
தோற்றம்: 28 ஜூலை 1945 - மறைவு: 01 மார்ச் 2026
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம் மற்றும் கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நடராசா யோகராஜா அவர்கள் 01-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா (திருச்செல்வம்) - மங்கையற்கரசி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி - இராசம்மா தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற ஜெயபத்மினி (பேபி) அவர்களின் அன்பு கணவரும்,
ஜெயப்பிரியா(ஆசிரியை - யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை), ஜெயபானு (ஆசிரியை - பன்னாலை சேர் கனகசபை அ.த.க பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மநேசன் (ஆசிரியர் - யாழ். அருணோதயாக் கல்லூரி),சுரேந்திரன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சந்திரிகாந்தி, சந்திரகுமாரி, ஸ்ரீபாலன், சந்திரவதனா, மதிவதனா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
சரண்ஜன், அக்சயன், சக்திதரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-03-2026 செவ்வாய்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோண்டாவில் காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
முத்தட்டுமட லேன்,
கோண்டாவில் மேற்கு, கோண்டாவில்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
