திருமதி நடராசபிள்ளை வள்ளியம்மை (இராசம்மா)

நடராசபிள்ளை வள்ளியம்மை (இராசம்மா)

தோற்றம்: 22 ஆகஸ்ட் 1937 - மறைவு: 29 மார்ச் 2024

வவுனியா நெடுங்கேணி மாமடுவைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை கணுக்கேணி மேற்று, கனடாவை Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராசபிள்ளை வள்ளியம்மை அவர்கள் 29-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாசிலாமணி - சுந்தரம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா - வேலாசி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற நடராசபிள்ளை (மாணிக்கவாசகம்) அவர்களின் அன்பு மனைவியும்,
 
பிரபாகரன், சித்திரா (அவுஸ்திரேலியா), கருணாகரன் (கனடா), மீரா (இலங்கை), அனுரா, திபாகரன் (கனடா), உதயகரன் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான மதுரா (லண்டன்), வசிகரன் (கனடா) மற்றும் தசரதன் (மலேசியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
இந்துமதி, இராஜரட்ணம் (அவுஸ்திரேலியா), விக்னேஸ்வரன் (இலங்கை), சிறீஸ்கந்தராஜா, தாட்சாயினி (கனடா), மேரிசுதா (அவுஸ்திரேலியா), அரவிந்தன் (லண்டன்), சிவமணி (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான மீனாட்சிப்பிள்ளை, செல்வநாயகம், விசுவலிங்கம், விசாலாட்சி, இரத்தினம், தியாகராஜா, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
பாரதி, அர்ஜீன், சாரங்கா, சித்திராங்கன், சங்கவி, திபூசன், சாகித்தியன், அஜேக், சுருதி, அபிஷேக், ஆகாஷ், அஸ்வின், ஆரபி, கதிர், சாணக்கியம், வீஷ்மன், சாத்வீகன், அனுஷன், ஆகிரி, துகிரி, சாணவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
 
கிரன், ஜோஸ்வா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
 
அன்னாரின் புகழுடல் 11-05-2024 சனிக்கிழமை அன்று Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, 12-05-2024 இறுதிக்கிரியைகள் காலை 7.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை நடைபெற்று, தகனம் செய்யப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/05/2024 04:00)